யாழ்ப்பாணத்தின் சாதிய ஊழல்களை ஆய்வு செய்து அவற்றை வெளிப்படுத்துவதோடு போலிப் பொதுவுடைமைவாதிகளதும் போலி முற்போக்குவாதிகளதும் முகத்திரையை கிழித்து அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்துவதே எமது நோக்கமாகும்.எமக்கு ஆதரவு தரும் எல்லா தோழர்களுக்கும் எமது நன்றி உரித்தாகட்டும்.மக்கள் வாழ்வதற்கும் உரிமைகளை பூரணமாக அனுபவிப்பதற்குமே உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதை சாதியின் ,மதத்தின் பெயரால் சுரண்டுவதற்கு எவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

சாதி பற்றிய அறிவு நம்மிடம் இல்லாமையே சாதி பாகுபாடுகளுக்கு காரணம்.சாதி பாகுபாடுகளுக்கு இந்து மதத்தை ஒரேயடியாக குற்றம் சாட்டி விடமுடியாது.புரட்சி தானாக ஒருநாளும் உருவாகாது.சாதி பற்றிய எழுத்துக்களில்,விவாதங்களில் எம்மோடு நீங்கள் கைகோர்த்து செயல்படவேண்டுமென்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.எமக்கு ஆலோசனை கூறுங்கள்.
அது அதிக நன்மை பயக்கும்.இந்த இணையத்தில் இருக்கும் கட்டுரைகள் கண்டு,சமூக சீர்கேடுகளை விரும்பும் அயோக்கியர்கள் துடி துடிப்பதைக் காண முடிகிறது.அப்படிப்பட்ட பெருச்சாளிகளை அகற்றுவதே எம் முழு நேர வேலைத் திட்டமாகும்.தலித் அமைப்புகளை நடத்துபவர்கள் துரோகிகள்.அவர்கள் மக்கள் விரோதிகள்.மக்களை அசிங்கப்படுத்துபவர்கள்.தலித் வாதிகள் யாழ்மாவட்ட,மற்றும் தமிழக வடுகரின் கைக்கூலிகள்.சமூக மாற்றம் ஸீர் திருத்தம் எதுவும் நடவாமல்
பார்த்துக்கொள்ளும் கூலிப் படையினர்.இவர்களிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.நன்றி.

பாதகம் செய்வோரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா – பாரதி

கள்ளப்பார்ட்  விஜயகுமார் (ஆசிரியர்குழு)

London England

Advertisements